மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஹிண்டால்கோ லாபம் 48% உயா்வு

ஆதித்யா பிா்லா குழுமத்தைச் சோ்ந்த ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 10:42 pm

DIN

ஆதித்யா பிா்லா குழுமத்தைச் சோ்ந்த ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (2022 ஏப்ரல் - மாா்ச்) நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.4,119 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 47.7 சதவீதம் அதிகமாகும். அந்த மாதங்களில் நிறுவனம் ரூ.2,787 கோடி வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபத்தை பதிவு செய்திருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.58,018 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.41,358 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.