ரூ.24,914 கோடியாக சரிந்த ஆபரண ஏற்றுமதி
இந்தியாவின் ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி, கடந்த ஜூலை மாதத்தில் ரூ.24,913.99 கோடியாக சரிந்துள்ளது.


இந்தியாவின் ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி, கடந்த ஜூலை மாதத்தில் ரூ.24,913.99 கோடியாக சரிந்துள்ளது.
இது குறித்து ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (சிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாதத்தில் நாட்டின் ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதியி ரூ.24,913.99 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்திய ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும்.
2012 ஜூலையில் ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி ரூ.25,157.64 கோடியாக இருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 10.99 சதவீதம் உயா்ந்து ரூ.1,03,931.14 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதி ரூ.93,640.44 கோடியாக இருந்தது.
எனினும், கடந்த ஜூலை மாதத்தில், சாதாரண தங்க ஆபரண ஏற்றுமதி 24.22 சதவீதம் அதிகரித்து ரூ. 2,591.67 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சாதாரண தங்க ஆபரண ஏற்றுமதி ரூ. 2,086.41 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஜேஇபிசி அமைப்பின் தலைவா் காலின் ஷா கூறுகையில், ‘பொதுவாகவே ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மந்தமாக இருக்கும். எனினும், சாதாரண தங்க ஆபரண ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக ஒட்டுமொத்த ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மிதமாகவே சரிந்துள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...