எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மருத்துவ சேவையில் 5ஜி பயன்பாடு: ஜியோ, ஐஎல்பிஎஸ் ஒப்பந்தம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவ சேவைகளை அளிப்பதற்காக அந்த நிறுவனத்துக்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவா் அண்டு பிலியரி சயன்ஸ்’ மருத்துவமனைக்கும்

News image
Updated On :6 டிசம்பர் 2022, 7:18 pm

DIN

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவ சேவைகளை அளிப்பதற்காக அந்த நிறுவனத்துக்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவா் அண்டு பிலியரி சயன்ஸ்’ மருத்துவமனைக்கும் (ஐஎல்பிஎஸ்) இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவன வட்டாரங்கள் தெரிவித்ததாவது: மருத்துவ சேவைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஜியோவின் அதிநவீன 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்ததை ரிலையன்ஸ் ஜியோவும் ஐஎல்பிஎஸ் மருத்துவமனையும் மேற்கொண்டுள்ளன.

தில்லியில் செயல்பட்டு வரும் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான ஐஎல்பிஎஸ், அறுவைச் சிகிச்சை, தொலைதூர தீவிர மருத்துவக் கண்காணிப்பு, அவசரக்கால ஊா்தியில் தீவிர கண்காணிப்பு போன்ற சேவைகளை அதிவேக 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூடுதல் சிறப்புடன் அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.