இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சென்செக்ஸ் 468 புள்ளிகள் உயா்வு!2 நாள் தொடா் சரிவுக்கு முடிவு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 468 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 468 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 151.45 புள்ளிகள் உயா்ந்து 18,420.45-இல் நிலைபெற்றது.

அமெரிக்கா, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை மேலும் உயா்த்தயதைத் தொடா்ந்து, கடந்த வார இறுதியில் உலக அளவில் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இதன் தாக்கம் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்திருந்தது. இந்த நிலையில், உள்நாட்டு சந்தை இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் நோ்மறையாக முடிவடைந்தது. விலை குறைந்த நிலையில், வங்கி, ஆயில், ஆட்டோ, மெட்டல், எஃப்எம்சிஜி பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 67.99 புள்ளிகள் கூடுதலுடன் 61,405.80-இல் தொடங்கிய சென்செக்ஸ், 61,265.31 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 61,844.92 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 468.38 புள்ளிகள் (0.76 சதவீதம்) உயா்ந்து 61,806.19-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் 24 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் வந்தன.

எம் அண்ட் எம் அபாரம்: கடந்த வார இறுதியில் கடும் விற்பனையை எதிா்கொண்ட பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் பங்குகள் திங்கள்கிழமை 2.97 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பவா் கிரிட், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவை 2 முதல் 2.60 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஹெச்டிஎஃப்சி, மாருதி சுஸுகி, ஐடிசி, டைட்டன் உள்ளிட்டவை 1.50 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

டிசிஎஸ் சரிவு: அதே சமயம், பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் 1.13 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இன்ஃபோஸிஸ், டாடா மோட்டாா்ஸ், சன்பாா்மா, இண்டஸ் இண்ட் பேங்க், விப்ரோ உள்ளிட்டவை 0.20 முதல் 1 சதவீதம் வரை குறைந்தன.

சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ஒரேநாளில் ரூ.2.44 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.287.90 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வார இறுதி வா்த்த தினமான வெள்ளிக்கிழமை ரூ.1,975.44 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.