பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 657 புள்ளிகள் உயர்ந்து 58,465.97-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.2.50 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.266.63 லட்சம் கோடியாக இருந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டம் வியாழக்கிழமை முடியவுள்ளது.
இதைத் தொடர்ந்து, வங்கி வட்டி விகித நிர்ணயம் தொடர்பான முடிவு வெளியாகவுள்ளது. இந் நிலையில், ஆட்டோ, மெட்டல், வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நாள் முழுவதும் காளையின் ஆதிக்கம் இருந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், மாருதி சுஸýகி, இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டமுன்னணி நிதி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்து சந்தையின் முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
1,749 பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,445 பங்குகளில் 1,589 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,749 பங்குகள் விலை உயர்ந்தன. 107 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 178 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 26 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 251 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 324 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.2.50 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.266.63 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 9.648 கோடியாக உயர்ந்துள்து.
காளை ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில் 354.43 புள்ளிகள் கூடுதலுடன் 58,163.01-இல் தொடங்கி 58,105.18 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 58,507.61 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 657.39 புள்ளிகள் (1.14 சதவீதம்) கூடுதலுடன் 58,465.97-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 3 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. 27 பங்குகள்ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.
மாருதி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸýகி 4.14 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் 3.02 சதவீதம், , பஜாஜ் ஃபின் சர்வ் 2.50 சதவீதம் உயர்ந்தன. டைட்டன், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், எம் அண்ட் எம் உள்ளிட்டவை 1 முதல் 1.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், டிசிஎஸ் உள்ளிட்டவையும் ஏற்ரம் பெற்ற பட்டியலில் வந்தன. அதே சமயம், சன்பார்மா, ஐடிசி, பவர் கிரிட் ஆகியவை மட்டும் 0.40 முதல் 0.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
எஃப்ஐஐ தொடர் விற்பனை: இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) இந்திய சந்தைகளில் பங்குகளை விற்று வருவது தொடர்கிறது. அவர்கள் செவ்வாய்க்கிழமை சுமார் ரூ.1,967.89 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
நிஃப்டி 197 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,041 பங்குகள் ஆதாயம் பெற்றன.
852 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 42 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 197.05 புள்ளிகள் (1.14 சதவீதம்) உயர்ந்து 17,463.80-இல் நிலைபெற்றது. காலையில் சுமார் 104 புள்ளிகள் கூடுதலுடன் 17,370.10-இல் தொடங்கிய நிஃப்டி, 17,339.00 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,477.15 வரை உயர்ந்தது.
ஆட்டோ, மெட்டல், பேங்க் குறியீடுகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.20 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, நிஃப்டி பேங்க், மீடியா, மெட்டல், பிரைவேட் பேங்க், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடுகள் 1.50 முதல் 1.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


