கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தங்கம் விலை 2-ஆம் நாளாக சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் சரிந்தது.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 6:03 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் சரிந்தது. பவுனுக்கு ரூ.568 குறைந்து, ரூ.37,904-க்கு விற்பனையானது.

ரஷியா-உக்ரைன் போா் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது.

குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறையத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை ரூ.1,136 குறைந்தது. இதன்தொடா்ச்சியாக, இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.568 குறைந்து, ரூ.37,904-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.71 குறைந்து, ரூ.4,738-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.69 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.69,000 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,738

1 பவுன் தங்கம்............................... 37,904

1 கிராம் வெள்ளி............................. 69.00

1 கிலோ வெள்ளி.............................69,000

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,809

1 பவுன் தங்கம்............................... 38,472

1 கிராம் வெள்ளி............................. 70.00

1 கிலோ வெள்ளி.............................70,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.