சோனி நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய புதிய வயர்லெஸ் ஹெட்ஃபோன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
'WH-XB910N' என்ற இந்த புதிய சோனி வயர்லெஸ் ஹெட்ஃபோனில் எக்ஸ்ட்ரா பாஸ், டூயல் சென்சார் ஒலி தொழில்நுட்பம், அடாப்டிவ் சவுண்ட் கன்ட்ரோல், நீண்ட பேட்டரி ஆயுள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
ரூ.14,990க்கு 'WH-XB910N' ஹெட்ஃபோன்கள் கருப்பு மற்றும் நீல நிறங்களில் சோனி ஸ்டோர்கள் மற்றும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் கிடைக்கும்.
காது முழுவதும் மூடக்கூடிய இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன், துல்லியமான ஒலியை கேட்கச் செய்கின்றன. ஹேண்ட்ஸ்-ஃப்ரீ அழைப்புகளுக்கு உங்கள் குரல் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க, ஆடியோ சிக்னல் செயலாக்கத்துடன் இரண்டு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன்களை ஒருங்கிணைக்கும் 'பிரிசிஸ் வாய்ஸ் பிக்கப் டெக்னாலஜி'(Precise Voice Pickup Technology) தொழில்நுட்பம் இதில் உள்ளது.
மேலும் பாடல்களின் உயர்தர ஒலிக்கு 'டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் இன்ஜின்'(Digital Sound Enhancement Engine) உள்ளது. சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறு ஒலி அமைப்புகளை மாற்றுகிறது. சத்தம் நிறைந்த இடத்தில் இருந்தாலும் அமைதியான சூழ்நிலையை உணர முடியும்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் இரண்டு புளூடூத் சாதனங்களுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
WH-XB910N ஹெட்ஃபோன்கள் கூகுள் அசிஸ்டன்ட்(Google Assistant) மற்றும் அலெக்ஸா(Alexa)வுடன் இணக்கமானவை.
ப்ளூடூத் வழியாக 'விண்டோஸ் 10' கணினியுடன் ஹெட்ஃபோன்களை இணைக்க 'ஸ்விப்ட் பேர்'(Swift Pair) கருவி இதில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் ஆடிப்பெருக்கு விழா, மகா கும்பாபிஷேகம்

வளா்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் அனைவருக்கும் பங்கு: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்பு

கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


