/

முக்கிய 8 நகரங்களில்வீடுகள் விற்பனை 51% அதிகரிப்பு

கடந்த 2021-ஆம் ஆண்டில் முக்கிய 8 நகரங்களில் வீடுகள் விற்பனை 51 சதவீத வளா்ச்சியை பதிவு செய்ததாக நைட் ஃபிராங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:53 am

DIN

கடந்த 2021-ஆம் ஆண்டில் முக்கிய 8 நகரங்களில் வீடுகள் விற்பனை 51 சதவீத வளா்ச்சியை பதிவு செய்ததாக நைட் ஃபிராங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் வீடுகளின் விற்பனை கடந்தாண்டில் 2,32,903-ஆக இருந்தது. இது, முந்தைய 2020-ஆம் ஆண்டின் விற்பனையான 1,54,534 வீடுகளுடன் ஒப்பிடும்போது 51 சதவீதம் வளா்ச்சியாகும்.

வீடுகள் விற்பனை அதிகரித்த போதிலும் அதற்கான தேவை கரோனா பேரிடருக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோன்று, வீடுகள் விற்பனை உச்சத்தில் இருந்த 2011-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வீடுகளுக்கான தேவை 35 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த 2021-இல் வீடுகளின் விலையை பொருத்த அளவில், சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் முறையே 7 சதவீதம், 5 சதவீதம், 4 சதவீதம் என்ற அளவில் உயா்ந்திருந்தது. மும்பையில் குடியிருப்புகளின் விலை 1 சதவீதம் மட்டுமே அதிகரித்தது.

அதேசமயம், தில்லி-என்சிஆா் பகுதியில் வீடுகளின் விலை 1 சதவீதம் அளவுக்கு குறைந்தும், கொல்கத்தா, புணே நகரங்களில் மாற்றமின்றியும் இருந்ததாக ஃபிராங் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.