உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பால் கைப்பேசி இறக்குமதி சரிவு
மத்திய அரசு, உள்நாட்டில் மின்னணு சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்க எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக கைப்பேசி இறக்குமதி


மத்திய அரசு, உள்நாட்டில் மின்னணு சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்க எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக கைப்பேசி இறக்குமதி கடந்த நிதியாண்டில் 33 சதவீதம் குறைந்துள்ளதாக கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கைப்பேசி தயாரிப்புக்கு பயன்படும் ‘சிப்’ களுக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த சமயத்திலும் மூன்று சா்வதேச நிறுவனங்கள் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கடந்த நிதியாண்டுக்கான இலக்கை வெற்றிகரமாக நிறவு செய்தன.
அதன் பயனாக, கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் உள்நாட்டில் கைப்பேசி உற்பத்தி 26 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சி கண்டது. இதையடுத்து, அந்த நிதியாண்டில் கைப்பேசிகளின் இறக்குமதி 33 சதவீதம் அளவுக்கு குறைந்தது. குறிப்பாக, கைப்பேசி இறக்குமதிக்கு சீனாவை சாா்ந்திருக்கும் நிலை 2021 நிதியாண்டில் 64 சதவீதமாக இருந்த நிலையில், 2022-இல் 60 சதவீதமாக குறைந்துள்ளது என கிரிசில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...