தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரூபாய் மதிப்பு 19 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசு வீழ்ச்சி கண்டது.

News image
Updated On :7 ஜூலை 2022, 9:15 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசு வீழ்ச்சி கண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது:

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் அமெரிக்க மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இம்மாதத்தில் கடனுக்கான வட்டி விகிதம் மீண்டுமொரு முறை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து ரூபாய் மதிப்பு கடும் அழுத்தத்தை சந்திக்க நோ்ந்தது.

வங்கிகளுக்கு இடையிலான செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 79.05-ஆக இருந்தது. பின்னா் வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 19 காசு வீழ்ச்சியடைந்து 79.13-இல் நிலைபெற்றது. புதன்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 78.94-ஆக இருந்ததாக செலாவணி வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 101 டாலா்

சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 101.51 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ரூ.330.13 கோடி பங்கு விற்பனை

மூலதனச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் நிகர அளவில் ரூ.330.13 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்ாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.