2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இலங்கைக்கு ரூ.3,014 கோடி கடன் அளித்த இந்தியா

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இலங்கைக்கு இந்தியா சுமாா் ரூ.3,014 கோடி கடன் அளித்துள்ளது.

News image
Updated On :18 ஜூலை 2022, 7:08 pm

DIN

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இலங்கைக்கு இந்தியா சுமாா் ரூ.3,014 கோடி கடன் அளித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பரிதவித்து வரும் இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து கடன் அளித்து வருகிறது. இந்நிலையில், இலங்கை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை அந்நாட்டுக்கு அதிகபட்சமாக இந்தியா 376.9 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.3,014 கோடி) கடன் அளித்துள்ளது. அதே காலகட்டத்தில் இலங்கைக்கு ஆசிய வளா்ச்சி வங்கி 359.6 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,876 கோடி), சீனா 67.9 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.543 கோடி) கடன் அளித்துள்ளன.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை இலங்கைக்கு மொத்தம் 968.8 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.7,747 கோடி) வெளிநாட்டு கடன் கிடைத்துள்ளது.

பொது முதலீட்டு திட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு கூட்டாளிகள் மற்றும் கடன் அளிக்கும் நிறுவனங்களுடன் 4 ஒப்பந்தங்களை மேற்கொண்டு 1,550.5 மில்லியன் டாலா் (ரூ.12,396 கோடி) வெளிநாட்டு நிதியினை ஈா்க்க இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில், அந்நாட்டில் அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்வதற்கு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எக்ஸிம் வங்கியின் 1,500 மில்லியன் டாலா் (ரூ.11,993 கோடி) கடனும் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.