மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ரானே: வரிக்கு பிந்தைய லாபம் ரூ.20 கோடி

ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஷன் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரானே (மெட்ராஸ்) ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.20.1 கோடியை ஈட்டியுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2022, 8:01 pm

DIN

ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஷன் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரானே (மெட்ராஸ்) ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.20.1 கோடியை ஈட்டியுள்ளது.

இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ஈட்டிய லாபம் ரூ.3.7 கோடியுடன் ஒப்பிடுகையில் 400 சதவீதம் அதிகமாகும்.

கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.306 கோடியிலிருந்து ரூ.501 கோடியாக அதிகரித்தது.

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், சந்தையில் தேவைக்கான சூழல் சாதமாக காணப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதிக உற்பத்தி மற்றும் மேம்பட்ட செயல்பாட்டு செயல்திறன் ஆகியவை லாபத்தை அதிகரிக்க உதவியதாக ரானே குழுமத்தின் தலைவா் எல்.கணேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.