எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

 2 நாள் சரிவுக்குப் பிறகு ஏற்றம்: சென்செக்ஸ் 548 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தை 2 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு புதன்கிழமை நேர்மறையாக முடிந்தது.

News image
Updated On :27 ஜூலை 2022, 10:54 pm

தினமணி

பங்குச் சந்தை 2 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு புதன்கிழமை நேர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 548 புள்ளிகள் உயர்ந்தது. ஐடி, வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு காணப்பட்டது.
 அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வு குறித்த முடிவு அறிவிக்க உள்ளது.
 இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்ற நிலைப்பாடு காணப்பட்டதால் சந்தையில் பங்குகளை வாங்குவதற்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. குறிப்பாக ஐரோப்பிய சந்தை முன்னேற்றம் பெற்றிருந்தது. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 1,686 பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,465 நிறுவனப் பங்குகளில் 1,635 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 1,686 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. 144 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 103 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 30 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ. 2.16 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.259.72 லட்சம் கோடியாக இருந்தது.
 சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 10 புள்ளிகள் குறைந்து 55,258.29-இல் தொடங்கி 55,157.99 வரை கீழே சென்றது. பின்னர், 55,853.09 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 547.83 புள்ளிகள் (0.99 %)
 உயர்ந்து 55,816.32-இல் நிலைபெற்றது. பெரும்பாலான நேரம் சந்தை "காளை'யின் ஆதிக்கத்தில் இருந்தது.
 சன் பார்மா அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தர நிறுவனப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன. இதில், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பார்மா 3.36 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது.
 இதற்கு அடுத்ததாக, எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஏஷியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை 2 முதல் 2.70 சதவீதம் வரை உயர்ந்தன. ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ,இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, மாருதி சுஸýகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 பார்தி ஏர்டெல் சரிவு: அதே சமயம், பார்தி ஏர்டெல் 1.32 சதவீதம் குறைந்தது. கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபின் சர்வ், என்டிபிசி, மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் சிறிதளவு குறைந்தன.
 நிஃப்டி 158 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 868 நிறுவனப் பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 1,078 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. "நிஃப்டி 50' பட்டியலில் 46 நிறுவனப் பங்குகள் ஆதாயத்தையும், 4 பங்குகள் சரிவையும் கண்டன.
 வர்த்தக முடிவில் நிஃப்டி 157.95 புள்ளிகள் (0.96 %) உயர்ந்து 16,641.80-இல் நிலைபெற்றது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.