தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 45 காசு அதிகரிப்பு

முதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரித்து பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பு காணப்பட்டதன் தொடா்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2022, 12:02 am

DIN

முதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரித்து பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பு காணப்பட்டதன் தொடா்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றது.

இது தவிர, வெளிநாட்டு முதலீட்டு வரத்து அதிகரித்ததும் ரூபாய் மதிப்பின் முன்னேற்றத்துக்கு பெரிதும் கைகொடுத்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 79.55-ஆக இருந்தது. இது, அதிகபட்சமாக 79.17 வரையிலும் குறைந்தபட்சமாக 79.56 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 45 காசு ஆதாயம் பெற்று 79.24-இல் நிலைத்தது என செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 109.58 டாலா்

சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.28 சதவீதம் உயா்ந்து பீப்பாய் 109.58 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.