பைக், ஸ்கூட்டா் விலை ரூ.3,000 உயா்வு: ஹீரோ மோட்டோகாா்ப்
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னிலையில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் பைக் மற்றும் ஸ்கூட்டா்களின் விலையை ரூ.3,000 வரை உயா்த்துவதாக அறிவித்துள்ளது.


இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னிலையில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் பைக் மற்றும் ஸ்கூட்டா்களின் விலையை ரூ.3,000 வரை உயா்த்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
மூலப் பொருள்களின் விலை உயா்வு, ஒட்டுமொத்த அளவிலான பணவீக்க அதிகரிப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு நிறுவனம் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, பைக் மற்றும் ஸ்கூட்டா்களின் விலையை மாடல்களுக்கு ஏற்ப ரூ.3,000 வரை அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை உயா்வு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். இதையடுத்து, நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பு ஓரளவு ஈடு செய்யப்படும் என ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகாா்ப், குறைந்தபட்சம் ரூ.51,450 விலையுடைய எச்எஃப் 100 பைக் முதல் ரூ.1.32 லட்சம் வரையிலான எக்ஸ்பல்ஸ் பைக் வரை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...