ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பங்குச் சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 1,223 புள்ளிகள் உயர்வு

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் 3 நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

News image
Updated On :9 மார்ச் 2022, 10:11 am

DIN

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் 3 நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

நேற்று (மார்ச்-8) 53,424.09 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 53,793.99 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,223.24 புள்ளிகள் உயர்ந்து 54,647.33 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 16,013.45 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 16,078.00 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 331.90 புள்ளிகள் அதிகரித்து 16,345.35 புள்ளிகளில்  நிலைபெற்றது.

உக்ரைன் - ரஷியா போரால் கடந்த சில நாள்களாக இறக்கத்தைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை இன்று நிறைவுடன் முடிந்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.