ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காளை ஆதிக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 817 புள்ளிகள் உயர்வு

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் 4-வது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

News image
Updated On :10 மார்ச் 2022, 10:08 am

DIN

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் 4-வது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

நேற்று (மார்ச்-9)  54,647.33 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 56,242.47 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 817.06 புள்ளிகள் உயர்ந்து 55,464.39 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 16,345.35 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 16,757.10 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 249.55 புள்ளிகள் அதிகரித்து 16,594.90 புள்ளிகளில்  நிலைபெற்றது.

சில நாள்களாக இறக்கத்தைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை கடந்த 2 நாளாக மெல்ல மீண்டு வருகிறது.

குறிப்பாக ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனி லிவர், பஜாஜ் பைனானஸ் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.