திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7500 கோடியில் இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 7500 கோடியில், 1000 மீட்டர் நீளத்துடன் கூடிய இரண்டு சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டமிட்டள்ளதாக 

News image
Updated On :15 மார்ச் 2022, 9:26 pm

DIN

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 7500 கோடியில், 1000 மீட்டர் நீளத்துடன் கூடிய இரண்டு சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டமிட்டள்ளதாக  தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் அளித்த பேட்டி:

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் கதி சக்தி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது வெளித் துறைமுக திட்டத்தில் ரூ.7500 கோடி மதிப்பில் ஆயிரம் மீட்டர் நீளத்துடன் கோடியே 2 சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் 18 மீட்டர் ஆழம் கொண்ட கப்பல்களை கையாள முடியும். இதன் மூலம் துறைமுக ஆணையத்துக்கு 4.10 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை கையாளுவதற்கான கொள்முதல் உருவாக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சரக்குப் பெட்டகங்கள் கொள்ளவுடைய பெரிய கப்பல்களை  கையாள முடியும். பொது, தனியார் கூட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதோடு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக 965 ஏக்கர் நிலப்பரப்பை வ.உ.சி. துறைமுகம் ஒதுக்கி உள்ளது. இதில் 745 ஏக்கர் நிலப்பரப்பு குத்தகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வ.உ.சி. துறைமுக ஆணையத்துக்கு தேவையான தண்ணீரில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் மூலம் 3 மில்லியன் லிட்டரை பெற்று வருகிறது. 

மேலும் வாழவல்லான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 750 கிலோ லிட்டர் குடிநீரையும், மங்களக்குறிச்சியில் உள்ள துறைமுகத்திற்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 1400 கிலோ லிட்டர் குடிநீரையும் பெற்று வருகிறது.

2025-ம் ஆண்டில் துறைமுகத்தின் தண்ணீர் தேவையானது 6.30 மில்லியன் லிட்டர்  என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு துறைமுக நிலையத்தில் ரூ.144 கோடி செலவில் 5 மில்லியன் லிட்டர் உப்புநீரை நன்னீராக்கும் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. 

ரயில் சரக்குப்பெட்டிகளில்  உள்ளேயும், வெளியிலும் எடையை கண்காணிப்பதற்காக ரூ.23 லட்சம் செலவில் 140 மெட்ரிக் டன் மின்னணு ரயில் எடை பார்க்கும் செயலி துறைமுக ரயில் மார்செல்லிங் சேமிப்பு கிடங்கில் நிறுவப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.