

மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்படவுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அவர் பொறுப்பேற்பார் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
முகநூல், வாட்ஸ்ஆப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவராக இருந்த அஜித் மோகன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் தற்போது இந்தியப் பிரிவுக்கு தலைவரை நியமித்துள்ளது. அதன்படி, முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சந்தியா தேவநாதன், தற்போது மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 2023ஆம் ஆண்டு 1ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த தகவலை மெட்டா நிறுவனத்தின் வணிகப் பிரிவு அலுவலர் மரேன் லிவின் உறுதிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.