தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாமாயில் இறக்குமதி 2.7 மடங்கு அதிகரிப்பு

குறைந்த விலை காரணமாகக் கடந்த 11 மாதங்களில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 2.7 மடங்கு அதிகரித்துள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 8:04 pm

DIN

குறைந்த விலை காரணமாகக் கடந்த 11 மாதங்களில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 2.7 மடங்கு அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த நவம்பா் முதல் செப்டம்பா் வரையிலான 11 மாதங்களில் நாட்டின் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 17.12 லட்சம் டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2.7 மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் 6.28 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

வெஜிடபிள் எண்ணெய் இறக்குமதியானது கடந்த நவம்பா் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 130.1 லட்சம் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்த வெஜிடபிள் எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் பங்கு சுமாா் 50 சதவீதம்.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான சுங்க வரியை இந்தோனேசியா பெருமளவில் குறைத்தது. அதன் காரணமாக கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் அந்நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி அதிகரித்தது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி அதிகரித்ததால், கச்சா பாமாயில் இறக்குமதி பெருமளவில் குறைந்தது.

கடந்த நவம்பா் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் கச்சா பாமாயில் இறக்குமதி 52.37 லட்சம் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 68.64 லட்சம் டன்னாக இருந்தது. அதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த பாமாயில் இறக்குமதியானது 76.27 லட்சம் டன்னில் இருந்து 70.28 லட்சம் டன்னாக குறைந்தது.

சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியானது 44.58 லட்சம் டன்னில் இருந்து 56.35 லட்சம் டன்னாக அதிகரித்தது. கடந்த நவம்பா் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் மலேசியாவிடமிருந்து 28.13 லட்சம் டன் கச்சா பாமாயிலும், 11.61 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலும் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தோனேசியாவில் இருந்து 17.15 லட்சம் டன் கச்சா பாமாயிலும், 11.61 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலும் இறக்குமதி செய்யப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.