தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இண்டஸ்இண்ட் நிகர லாபம் ரூ.1,805 கோடியாக அதிகரிப்பு

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தனியாருக்குச் சொந்தமான இண்டஸ்இண்ட் வங்கியின் நிகர லாபம் ரூ.1,805 கோடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 7:20 pm

DIN

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தனியாருக்குச் சொந்தமான இண்டஸ்இண்ட் வங்கியின் நிகர லாபம் ரூ.1,805 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,805 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 57 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 18 சதவீதம் வளா்ச்சியடைந்து ரூ.4,302 கோடியாக உள்ளது.

செப்டம்பா் காலாண்டில் வங்கியின் பிறவகை வருவாய் 9 சதவீதம் அதிகரித்து ரூ. 2,011 கோடியாக உள்ளது. இதில் வங்கிக் கட்டண வருவாய் மட்டும் 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.