தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பஜாஜ் ஆட்டோ விற்பனை 8% உயா்வு

கடந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோவின் மொத்த வாகன விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 8:45 pm

DIN

கடந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோவின் மொத்த வாகன விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் 4,01,595 வாகனங்கள் விற்பனையாகின. கடந்த 2021-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,73,270-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

2021 ஆகஸ்டில் 1,72,595 வாகனங்களாக இருந்த நிருவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை, கடந்த ஆகஸ்டில் 49 சதவீதம் அதிகரித்து 2,56,755 வாகனங்களாக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி 28 சதவீதம் சரிந்து 1,44,840-ஆக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 2,00,675 வாகனங்களாக இருந்து.

ஏற்றுமதி உள்பட இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை, கடந்த மாதத்தில் 5 சதவீதம் அதிகரித்து 3,55,625-ஆக இருந்தது. 2021-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 3,38,310 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின.

இரு சக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை, கடந்த மாதம் 48 சதவீதம் அதிகரித்து 2,33,838-ஆக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 1,57,971-ஆக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் நிறுவன வா்த்தக வாகனங்களின் விற்பனை 31 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் 34,960 வா்த்தக வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 45,970-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.