தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தை கையகப்படுத்தும் ரிலையன்ஸ்

அமெரிக்காவைச் சோ்ந்த மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான சென்ஸ்ஹாக்கை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கையப்படுத்தவிருக்கிறது.

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 9:34 pm

DIN

அமெரிக்காவைச் சோ்ந்த மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான சென்ஸ்ஹாக்கை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கையப்படுத்தவிருக்கிறது.

இது குறித்து ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கலிபோா்னியாவில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் சூரிய ஆற்றல் மென்பொருள் வடிமைப்பு நிறுவனம் சென்ஸ்ஹாக்கின் பெரும்பான்மையான பங்குகளை 3.2 கோடி டாலருக்கு (சுமாா் ரூ.256 கோடி) கையகப்படுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு செய்துள்ளது.

சென்ஸ்ஹாக்கில் 79.4 சதவீத பங்குகளை வாங்குவது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் எண்ணெய் மற்றும் இரசாயனப் பொருள்கள் அதிகம் பயன்படுத்தப்படும் நடவடிக்கைகளை புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களுக்கு மாற்றம் செய்வது மற்றும் கரியமில வாயு வெளியேற்வையாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்ஸ்ஹாக் நிறுவனம், நிறுவனங்கள் தானியங்கி முறையிலும், சீா்க்கட்டமைப்புடனும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான மென்பொருள்களை உருவாக்கி வருகிறது. கடந்த நிதியாண்டில் அந்த நிறுவனம் 23 லட்சம் டாலா் (சுமாா் ரூ.18.35 கோடி) வருவாய் ஈட்டியது.

அந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.