தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்செக்ஸ் மேலும் 168 புள்ளிகள் வீழ்ச்சி

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சமிக்ஞைகளுக்கு மத்தியில், உள்நாட்டுச் சந்தை புதன்கிழமையும் சரிவைச் சந்தித்தது.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 10:08 pm

தினமணி

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சமிக்ஞைகளுக்கு மத்தியில், உள்நாட்டுச் சந்தை புதன்கிழமையும் சரிவைச் சந்தித்தது. நாள் முழுவதும் அதிக ஏற்றம், இறக்கம் இருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 168 புள்ளிகளை இழந்தது.
 ஐரோப்பாவின் எரிசக்தி நெருக்கடி மற்றும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் உள்ளிட்டவற்றால் ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவை வீழ்ச்சியில் இருந்தன. அமெரிக்கச் சந்தைகள் செவ்வாயன்று தொடர்ந்து ஏழாவது நாளாக இழப்பைச் சந்தித்தது. இதன் தாக்கத்தால், ஐரோப்பிய சந்தைகளும் பலவீனமாக தொடங்கியது. இது உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது.
 வங்கி வட்டி விகித உயர்வு, பொருளாதாரப் பின்னடைவு உள்ளிட்டவை முதலீட்டாளர்களின் உணர்வை பாதித்துள்ளது. குறிப்பாக வட்டி விகித உயர்வால் தாக்கத்துக்குள்ளாகும் வங்கி மற்றும் ஆட்டோ நிறுவனப் பங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்தன. சென்செக்ஸ் புதன்கிழமை காலையில் 407.73 புள்ளிகள் குறைந்து 58,789.26-இல் தொடங்கி, 58,722.89 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 59,166.46 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 168.08 புள்ளிகளை (0.28 சதவீதம்) இழந்து 59,028.91-இல் நிலைபெற்றது. இதேபோல, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 31.2 புள்ளிகள் (0.18 சதவீதம்) இழப்புடன் 17,624.40-இல் நிலைபெற்றது.
 சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் விலை குறைந்தன. இதில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 4.13 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், நெஸ்லே, விப்ரோ, சன்பார்மா உள்ளிட்டவையும் அதிகம் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 அதே சமயம், பிரபல தனியார் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 1.69 சதவீதம் குறைந்து அதிகம் வீழ்ச்சி கண்டது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், மாருதி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 0.50 சதவீதம் முதல் 1.30 சதவீதம் வரை குறைந்தன.
 சந்தை மூலதன மதிப்பு ரூ.51 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.280.87 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை அன்று ரூ.1,144.53 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.