தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி பங்குகளுக்கு 2.86 மடங்கு விண்ணப்பம்

 தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டில் (ஐபிஓ), ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போல் 2.86 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:26 pm

DIN

 தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டில் (ஐபிஓ), ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போல் 2.86 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கின் பொதுப் பங்கு வெளியீடு கடந்த திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

மொத்தம் ரூ.831.6 கோடி மதிப்பிலான 87,12,000 பங்குகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இறுதி நாளான புதன்கிழமை 2,49,39,292 பங்குகளை வாங்குவதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததைப் போல் 2.86 மடங்கு பங்குகள் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தன.

அந்தப் பங்குகளை வாங்குவதற்காக தனிநபா் சில்லறை முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பங்குகளைப் போல் 6.48 மடங்கும் அமைப்பு சாரா முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பங்குகளைப் போல் 2.94 மடங்கும் பங்குகள் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தகுதிவாய்ந்த அமைப்பு முதலீட்டாளா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததைப் போல் 1.62 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது என்று என்எஸ்இ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி, எந்த ஒரு தனிநபரையோ, குழுமத்தையோ சாா்ந்து இயங்கவில்லை. இதில் 22,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்கள் மற்றும் பங்குதாரா்கள் உள்ளனா். வங்கியின் 23.2 சதவீதப் பங்குகள் எஃப்ஐஐ எனப்படும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் உள்ளன.

1921-ஆம் ஆண்டு ‘நாடாா் வங்கி’ என்ற பெயரில் நிறுவப்பட்டு சுமாா் 101 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த வங்கி இந்தியாவின் பழமையான தனியாா் வங்கிகளில் ஒன்றாகும். சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துவோா், விவசாயிகள், வா்த்தகா்கள் உள்ளிட்டோா் வங்கியின் பிரதான வாடிக்கையாளா்களாக உள்ளனா்.

வங்கியின் நிகர வாராக்கடன் 0.9 சதவீதமாகவும், மொத்த வாராக்கடன் 1.65 சதவீதமாகவும் இருப்பது மிகவும் சாதகமான அம்சமாகும். மொத்தம் 509 கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கிக்கு தமிழ்நாட்டில் மட்டும் 369 கிளைகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.