திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஒவ்வொரு நிமிடமும் 1,100 போன்கள் விற்பனை! விழாக்கால சலுகை...

விழாக்கால ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒவ்வொரு நிமிடமும் 1,100 மொபைல்போன்கள் விற்கப்பட்டதாக ஓர் அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 செப்டம்பர் 2022, 2:24 pm IST

விழாக்கால ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒவ்வொரு நிமிடமும் 1,100 மொபைல்போன்கள் விற்கப்பட்டதாக ஓர் அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. 

அமேசான், பிளிப்கார்ட், வால்மார்ட், மீஷோ, மிந்த்ரா உள்ளிட்ட ஆன்லைன் வணிக விற்பனை தளங்கள் கடந்த ஒரு வாரம் விழாக்கால சலுகைகளை அறிவித்திருந்தன. 

இந்நிலையில், கடந்த சில நாள்களில் ஆன்லைன் வணிகத் தளங்களில் 60-70 லட்சம் மொபைல்போன்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரெட்சீர்(Redseer) நிறுவன அறிக்கையின்படி, ஒவ்வொரு நிமிடமும் கிட்டத்தட்ட 1,100 மொபைல்போன்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் கடந்த நான்கு நாள்களில்(செப்டம்பர் 22-25 )மட்டும் பெரிய வணிகத் தளங்களில் ரூ.11,000 கோடி மதிப்புள்ள மொபைல்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக, ஐபோன் 12, 13, ஒன்பிளஸ் போன்ற பிரீமியம் போன்கள் இந்த நான்கு நாட்களுக்கு மட்டும் பொருள்களை விற்பனைக்கு வைத்துள்ளன. 

அதுபோல கடந்த வாரத்தில் முதல் நான்கு நாட்களில் ரூ.5,500 கோடி மதிப்பிலான ஆடைகள், பாதணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனையாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான் ஃபேஷனுக்கான 60% விற்பனை, இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு நகரங்களில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வாடிக்கையாளர்கள் சாம்சங், ஒன்பிளஸ், எம்ஐ, எல்ஜி மற்றும் சோனி போன்ற தொலைக்காட்சி தயாரிப்புகளை விரும்புவதாக குறிப்பிட்ட வணிகத் தளம் கூறியுள்ளது. 

மீஷோ நிறுவனமும் அதன் விற்பனையின் முதல் நாளில் 85% ஆர்டர்களை 2, 3 மற்றும் 4 ஆவது அடுக்கு நகரங்களில் இருந்து பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செப்டம்பர் 22-25 வரையில் மட்டும், ஆன்லைன் வணிகத் தளங்கள் ரூ. 24,500 கோடி விற்பனையை எட்டியுள்ளன.

வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 5.5 கோடி பேர்.  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபேஷன் பிரிவில் அதிக விற்பனை நடந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.