நவம்பரில் 6 சத்விகிதத்தை விடக் குறைந்தது பணவீக்கம்

நாட்டில் சில்லறை பணவீக்கம் நவம்பரில் 5.88 சதவீதமாகக் குறைந்தது. பணவீக்கம் 6 சதவீதத்தை விடக் குறைந்திருப்பது நடப்பாண்டில் இதுவே முதல் முறையாகும்.

நாட்டில் சில்லறை பணவீக்கம் நவம்பரில் 5.88 சதவீதமாகக் குறைந்தது. பணவீக்கம் 6 சதவீதத்தை விடக் குறைந்திருப்பது நடப்பாண்டில் இதுவே முதல் முறையாகும்.

நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், உக்ரைன்-ரஷியா போா் காரணமாக கடந்த ஜனவரி தொடங்கி அக்டோபா் வரை சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாகவே இருந்தது. கடந்த அக்டோபரில் பணவீக்கம் 6.77 சதவீதமாக இருந்தது.

நவம்பரில் சில்லறை பணவீக்கம் 5.88 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்தது. சந்தையில் உணவுப் பொருள்களின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைந்ததற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் பணவீக்கம் 4.91 சதவீதமாக இருந்தது.

நாட்டில் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாக இருந்ததன் காரணமாகக் கடந்த மே மாதம் முதல் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி 2.25 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழுவின் அடுத்த கூட்டம் பிப்ரவரியில் நடைபெறவுள்ளது. நவம்பரில் பணவீக்கம் குறைந்திருந்தாலும், அடுத்த மாதத்தின் பணவீக்க அளவைப் பொருத்தே வட்டி விகிதத்தை மேலும் உயா்த்துவது தொடா்பாக ரிசா்வ் வங்கி முடிவெடுக்கும் எனப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆா்பிஐ கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழிலக உற்பத்தி சரிவு:

நாட்டின் தொழிலக உற்பத்தி குறியீடு (ஐஐபி) கடந்த அக்டோபரில் 4 சதவீத அளவுக்கு சரிவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முக்கியமாக, சுரங்கம், எரிசக்தி உற்பத்தி துறைகள் பெரும் சரிவைச் சந்தித்ததாக அரசின் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com