டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜனவரி 1 முதல் வணிக வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கிவரும் டாடா மோட்டார்ஸ் தனது வணிக வாகனங்களின் விலையை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புச் செலவு அதிகரிப்பை ஈடுகட்டுவதற்காக விலை உயர்த்துவதாக கூறியுள்ளது.
இந்த விலையுயர்வு தங்கள் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் முழுமைக்கும் பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, ஹோண்டா மற்றும் ஆடி போன்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஜனவரியில் வாகன விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | எது உண்மையான வளர்ச்சி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி