உச்சம் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச்சந்தை!

இந்திய பங்குச்சந்தை வணிகம் இன்று (டிச. 20) உச்சத்தை எட்டினாலும், நாள் இறுதியில் சரிவுடனே முடிவடைந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்திய பங்குச்சந்தை வணிகம் இன்று (டிச. 20) உச்சத்தை எட்டினாலும், நாள் இறுதியில் சரிவுடனே முடிவடைந்தது.  சென்செக்ஸ்  ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

பங்குச்சந்தை வணிகம் நேற்று ஏற்றத்துடன் முடிந்த நிலையில், இன்றைய வணிகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. ஒருகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டு 72,000 புள்ளிகளை சென்செக்ஸ் தாண்டியது. 

எனினும் இரண்டாம் பாதியில் ஆயிரம் புள்ளிகள் சரிந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 71,000 புள்ளிகளை எட்டியது. 

நாள் இறுதியில் சென்செக்ஸ் 930.88 புள்ளிகள் சரிந்து 70,506.31 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. பங்குச்சந்தையில் இது 1.30 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 302 புள்ளிகள் சரிந்து 21,150 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. இது மொத்த வணிகத்தில் 1.41 சதவிகிதம் சரிவாகும். 

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல்தர 30 நிறுவனங்களில் எச்.டி.எஃப்.சி. வங்கி நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே நேர்மறையாக ஏறுமுகத்தில் இருந்தது. மற்ற 29 நிறுவனங்களுன் பங்குகளும் சரிவிலேயே முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com