3 நாள்கள் விடுமுறை... உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை!
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (டிச. 26) பங்குசந்தை வணிகம் ஏறுமுகத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தன.


வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (டிச. 26) பங்குசந்தை வணிகம் ஏறுமுகத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தன.
வார இறுதி மற்றும் கிறிஸ்துமஸ் என மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பங்குச்சந்தை இன்று ஏறுமுகத்துடனே தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 229 புள்ளிகள் உயர்ந்து 71,336 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.32 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 91.95 புள்ளிகள் உயர்ந்து 21,441.35 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. இது 0.43 சதவிகிதம் உயர்வாகும்.
பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக என்டிபிசி, எம்&எம், விப்ரோ, கோட்டாக் வங்கி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...