அதானி குடும்பத்தின் மற்றொரு முறைகேடு! ஃபோர்ப்ஸ் குற்றச்சாட்டு!

கெளதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் மூலம் ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக போர்ஃப்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்


அதானி குழுமத்தின் மற்றொரு முறைகேட்டை ஃபோர்ப்ஸ் நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.  

கெளதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் மூலம் ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக ஃபோர்ப்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

அதானி குழுமத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்கள் வினோத் அதானி மேற்பார்வையில் இயங்கி வருகின்றன. துபை, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து அதானி குழுமத்துடன் தொடர்புடைய பிற நிறுவனங்களின் சர்வதேச வணிகத்தை வினோத் அதானி கவனித்து வருகிறார். இந்தியாவில் தங்கி வணிகம் செய்யாத பணக்கார இந்தியர்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் வினோத் அதானி உள்ளார். 

வினோத் அதானியின் மறைமுக கட்டுப்பாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த வணிகம் மற்றும் முதலீட்டு நிறுவனமான 'பினாக்கிள்' செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு ரஷியாவைச் சேர்ந்த விடிபி வங்கியில் வினோத் அதானி கடன் பெற்றுள்ளார். 

இந்தக் கடன் உக்ரைன் - ரஷியா போரின்போது 2021 ஏப்ரலில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ’பினாக்கிள்’ நிறுவனம் கடனாகப் பெற்ற 263 மில்லியன் டாலர்களில் 258 மில்லியன் டாலர்களை பெயரிடப்படாத பங்குகளுக்காக ஒதுக்கியுள்ளதாக ஃபோர்ப்ஸ் அறிக்கை வாயிலாக குற்றம் சாட்டியுள்ளது.

ரஷிய வங்கியிருலிருந்து பெற்ற கடன் தொகைக்கான உத்தரவாதமாக ஆஃப்ரோ ஏசியா ( Afro Asia) மற்றும் வேர்ல்ட்வைட் (Worldwide) ஆகிய இரு நிறுவனங்களை பினாக்கிள் குறிப்பிட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்குச் சொந்தமானது என்று ஃபோர்ப்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அதானி குழுமத்துக்கான பங்குகளை பிற நிறுவனங்கள் மூலம் பெற்று அதனை அதானி குழும பங்குகளில் முதலீடு செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பங்குகளை மிகைப்படுத்தி விற்பனை செய்ததாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது குற்றம் சாட்டியிருந்தது. இதன் எதிரொலியாக அதானி குழுமத்துக்குச் சொந்தமான பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களும் 125 பில்லியன் டாலர் மதிப்புள்ள சந்தை மதிப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாா் குறித்து தொடா்ந்து கண்காணித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com