திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஃபிராங்க்ஸ் சிஎன்ஜி மாடலை அறிமுகம் செய்த மாருதி சுசுகி நிறுவனம்

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யூவியான பிராங்க்ஸின் சிஎன்ஜி வேரியண்ட்டை ரூ.8.41 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் புதுதில்லியில் அறிமுகம் செய்துள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2023, 7:00 pm IST

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யூவியான பிராங்க்ஸின் சிஎன்ஜி வேரியண்ட்டை ரூ.8.41 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் புதுதில்லியில் அறிமுகம் செய்துள்ளது.

சிக்மா மற்றும் டெல்டா ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளும் முறையே ரூ.8.41 லட்சம் மற்றும் ரூ.9.27 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி மாடல்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது அதிகபட்சமாக 77.5 பிஎஸ் பவரையும், 28.51 கிமீ மைலேஜையும் வழங்கும்.

2010ல் நாங்கள் முதல் சிஎன்ஜி மாடலை அறிமுகப்படுத்தினோம்.  அன்றிலிருந்து, நாங்கள் நாட்டில் 14 லட்சத்துக்கும் அதிகமான எஸ்-சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். இது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் எங்கள் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கைக்கு ஒரு உண்மையான சான்றாகும் என்று சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரியான சஷாங்க் ஸ்ரீவஸ்தவா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிராங்க்ஸ் எஸ்-சிஎன்ஜி அதன் ஒட்டுமொத்த விற்பனையில் எஸ்-சிஎன்ஜி கார்களின் பங்கை அதிகரிக்கும் என்றும், அதே வேளையில் பசுமை இயக்கம் போர்ட்ஃபோலியோவை அது மேலும் வலுப்படுத்தும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவி்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.