மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உச்சத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்! இன்றும் 66,000 புள்ளிகளில் சென்செக்ஸ்

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி உச்சத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 

News image
Updated On :14 ஜூலை 2023, 11:29 am

DIN

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி உச்சத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 

நேற்று(வியாழக்கிழமை) 65,558.89 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று 65,775.49 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. 

பங்குச்சந்தை நேர முடிவில், சென்செக்ஸ் 502.01 புள்ளிகள் அதிகரித்து 66,060.90 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இதன் மூலமாக சென்செக்ஸ் இன்றும் 66,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 150.75 புள்ளிகள் உயர்ந்து 19,564.50 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. 

ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், நெஸ்ட்லாண்ட், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. 

எம் & எம், பவர் கிரிட், சன் பார்மா, பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. 

நேற்றும்(வியாழக்கிழமை) சென்செக்ஸ் 66,000 புள்ளிகளையும் நிஃப்டி 19,500 புள்ளிகளையும் கடந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.