கர்நாடகத்தில் ரூ.8,800 கோடியில் உற்பத்தி ஆலை: ஃபாக்ஸ்கான் திட்டம்

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய ஐபோன் அசெம்பிள் நிறுவனமான ஃபாக்ஸ்கான், தேவனஹள்ளி தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்தில்  ஆலையை அமைக்க முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் ரூ.8,800 கோடியில் உற்பத்தி ஆலை: ஃபாக்ஸ்கான் திட்டம்

பெங்களூரு: ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய ஐபோன் அசெம்பிள் நிறுவனமான ஃபாக்ஸ்கான், கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளி தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்தில் ரூ.8,800 கோடியில் துணை ஆலையை அமைக்க முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஃபாக்ஸ்கான் தொழில்துறை இணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிராண்ட் செங் தலைமையில் அதன் பிரதிநிதிகளுடன் முதல்வர் சித்தராமையா உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன் மூலம் ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான பாக்ஸ்கான் தொழில்துறை இணையம் ரூ.8,800 கோடி முதலீடு செய்யும் என தெரியவந்துள்ளது. இதனால் சுமார் 14,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் நிறுவனத்துக்கு தேவையான சுமார் 100 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றார் பாட்டீல். இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, தலைமைச் செயலாளர் வந்திதா சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அலையில் தொலைபேசிகளுக்குத் தேவையான இயந்திர உதிரிபாகங்களைத் தயாரிப்பதைத் தவிர, திரைகள் மற்றும் வெளிப்புற உறைகள் தயாரிப்பதிலும் பாக்ஸ்கான் தொழில்துறை இணையம் ஈடுபடும்.

ஆப்பிள் போன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது என்றார் அமைச்சர் எம்.பி.பாட்டீல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com