மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பங்குச்சந்தைகள் உச்சத்துடன் நிறைவு! சென்செக்ஸ், நிஃப்டி புதிய சாதனை!!

சென்செக்ஸ் 66,500 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,700 புள்ளிகளைக் கடந்தும் இன்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளன. 

News image
கோப்புப்படம்
Updated On :17 ஜூலை 2023, 11:22 am

DIN

சென்செக்ஸ் 66,500 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,700 புள்ளிகளைக் கடந்தும் இன்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளன. 

வாரத்தின் தொடக்க நாளான(திங்கள்) இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி உச்சத்துடன் நிறைவடைந்துள்ளன. 

கடந்த வெள்ளிக்கிழமை 66,060.90 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 66,148.18 என்ற புள்ளிகளில் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில், 529.03 புள்ளிகள் அதிகரித்து 66,589.93 புள்ளிகளில் வர்த்தகம் பெற்று வருகிறது. அதிகபட்சமாக 66,656.21 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 146.95 புள்ளிகள் உயர்ந்து 19,711.45 புள்ளிகளில் நிறைவுற்றது. 

இன்று எஸ்பிஐ, விப்ரோ, டாக்டர் ரெட்டி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுஸுகி, கிராசிம், அதானி எண்டர்பிரைசஸ், அப்போலோ மருத்துவமனை உள்ளிட்டவற்றின் பங்குகள் உயர்ந்தன. 

ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், டைட்டன், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எம்&எம், ஹெச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் ஆட்டோ, டிவிஸ் லேப், எஸ்பிஐ லைஃப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. 

கடந்த வாரம் சென்செக்ஸ் முதல்முறையாக 66,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்த நிலையில் இன்று மேலும் உச்சத்தை எட்டியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.