தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

என்டிபிசி பங்குகள் 4 சதவிகிதம் உயர்வு!

2023-24ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் என்டிபிசி நிறுவனத்தின் நிகர லாபம் 23 சதவிகிதம் அதிகரித்து 8,194.67 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

என்பிடிபிசி

Published On :

2023-24ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் என்டிபிசி நிறுவனத்தின் நிகர லாபம் 23 சதவிகிதம் அதிகரித்து ரூ.8,194.67 கோடியாக  உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் என்டிபிசி பங்கின் விலை 4.02 சதவிகிதம் உயர்ந்து ரூ218.45 நிலைபெற்றது. இன்றைய வர்த்தகத்தில் 4.23 சதவிகிதம் உயர்ந்து 52 வார உச்ச விலையான ரூ.218.90 தொட்டது.

தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 3.61 சதவிகிதம் உயர்ந்து ரூ.217.60-ஆக முடிவடைந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.8,194.67 கோடி உயர்ந்து ரூ.2,11,823.67 கோடியானது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் 18.45 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச் சந்தையில் 4.34 கோடி பங்குகளும் வர்த்தகமாயின.

பொதுத் துறையைச் சோ்ந்த என்டிபிசி நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 23 சதவிகிதம் உயா்ந்து ரூ.4,907.13 கோடியானது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.3,977.77 கோடியாக இருந்தது என்று என்டிபிசி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.43,560.72 கோடியிலிருந்து சற்று குறைந்து ரூ.43,390.02 உள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.4,066 கோடியாக உள்ளது, இது 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.3,717 கோடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.