பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 40 புள்ளிகளும் உயர்ந்து நிலைபெற்றன.
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவு குறித்து மாலையில் அறிவிக்க இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை காலையில் சுணக்கத்துடன் தொடங்கியது. வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் அதன் முடிவுக்காக காத்திருந்ததால் சந்தையில் பெரும்பாலான நேரம் வர்த்தகம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. இருப்பினும், உலோகம், எரிசக்தி துறை, எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ் துறை பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. ஆனால், வங்கி, நிதித் துறை பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. மேலும், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் மே மாதத்தில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு -3.48 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது சந்தைக்கு வெகு
சாதகமாக அமைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.86 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.290.89 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,677.60 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 27.68 புள்ளிகள் குறைந்து 63,115.48-இல் தொடங்கி 63,013.51 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 63,274.03 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 85.35 புள்ளிகள் கூடுதலுடன் 63,228.51-இல் முடிவடைந்தது.
17 பங்குகள் விலை உயர்வு:
சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 17 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,086 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 974 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள்ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டாடா ஸ்டீல் 2.39%
பவர்கிரிட் 1.65%
டாடா மோட்டார்ஸ் 1.49%
ரிலையன்ஸ் 1.28%
நெஸ்லே 1.02%
என்டிபிசி 1.00%
சரிவைக் கண்ட பங்குகள்
பஜாஜ் ஃபைனான்ஸ் 0.98%
இண்டஸ்இண்ட் வங்கி 0.95%
ஆக்ஸிஸ் வங்கி 0.88%
பார்தி ஏர்டெல் 0.74%
பஜாஜ் ஃபின்சர்வ் 0.49%
ஐசிஐசிஐ வங்கி 0.46%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


