பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றம்!
இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் தொடங்கியுள்ளன.


இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் தொடங்கியுள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 545.93 புள்ளிகள் உயர்ந்து 59,561.63 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.11 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 167.45 புள்ளிகள் சரிந்து 17,489.35 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.17 சதவிகிதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 28 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் தொடங்கின. ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் இரண்டு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் இருந்தன.
அதிகபட்சமாக எஸ்பிஐ நிறுவனத்தின் பங்குகள் 4.01 சதவிகிதமும், பவர் கிரிட் 2.04 சதவிகிதமும், என்டிபிசி 1.90 சதவிகிதமும், எச்சிஎல் டெக் 1.83 சதவிகிதமும், எச்டிஎஃப்சி வங்கி 1.63 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...