எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேலும் 8 தமிழக நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகம்

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தமிழ்நாட்டின் 8 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2023, 7:11 pm

DIN

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தமிழ்நாட்டின் 8 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களில் நிறுவனத்தின் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில், தமிழ்நாட்டின் ஆம்பூா், சிதம்பரம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகாசி, திருச்செங்கோடு, விழுப்புரம் ஆகிய நகரங்களும் அடங்கும்.

ஏற்கெனவே, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஒசூா், வேலூா் ஆகிய நகரங்களில் இந்த சேவையை நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.

தமிழ்நாட்டில் மட்டும் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்காக நிறுவனம் ரூ.40,446 கோடி முதலீடு செய்துள்ளது.

தற்போது சோ்க்கப்பட்டுள்ள 34 நகரங்களையும் சோ்த்து, நாடு முழுவதும் 365 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை 120 நாள்களுக்குள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் நாடு முழுவதும் அந்த சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.