அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பங்குகள் விற்பனை திடீா் அதிகரிப்பு: சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.

News image
Updated On :5 மே 2023, 5:08 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 695 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 186.80 புள்ளிகள் (0.92 சதவீதம்) உயா்ந்து 18,255.80-இல் நிலைபெற்றது.

ஆசியா, ஐரோப்பிய சந்தைகள் நோ்மறையாக இருந்தன. ஆனால், அமெரிக்க சந்தைகள் சரிவைச் சந்தித்திருந்தன. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை கடும் சரிவைக் கண்டது. பிரபல வீட்டு வசதி கடன் நிறுவனமான ஹெச்டிஎஃப்சியும் அதன் குழும நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கியும் ஒன்றாக இணைக்கப்படவுள்ளன. இந்த இணைப்பு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்படும் போது அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் இந்த நிறுவனப் பங்குகளை அதிகம் விற்பனைக்கு வரும் என சந்தையில் தகவல் பரவியதால் ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய இரண்டும் 6 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட இந்த இரண்டு பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்ததால், பங்குச்சந்தையில் கடும் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.38 லட்சம் கோடி குறைந்து ரூ.273.78 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வியாழனன்று ரூ.1,414.73 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 586.15 புள்ளிகள் குறைந்து 61,163.10-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 61,585.50 வரை மேலே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 61,002.17 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 694.96 புள்ளிகள் (1.13 சதவீதம்) குறைந்து 61,054.29-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 10 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 700 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,336 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 30 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

டைட்டன்.................................2.24%

அல்ட்ரா டெக் சிமெண்ட்..........1.65%

மாருதி .........................................1.43%

நெஸ்லே......................................1.40%

ஐடிசி...........................................1.02%

-----------------------------

சரிவைக் கண்ட பங்குகள்

ஹெச்டிஎஃப் பேங்க்................5.90%

ஹெச்டிஎஃப்சி..........................5.60%

இண்டஸ் இண்ட் பேங்க்.........5.29%

டாடா ஸ்டீல்............................2.16%

எம் அண்ட் எம்........................1.55%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.