வாரத்தின் முதல் நாளான பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை 62,027.90 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது.
பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 404.77 புள்ளிகள் அதிகரித்து 62,432.67 புள்ளிகளில் வர்க்கமாகி வருகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 108.95 புள்ளிகள் உயர்ந்து 18,423.75 புள்ளிகளில் உள்ளது.
டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | சச்சின் பைலட் நடைப்பயணம் இன்றுடன் நிறைவு! திரளானோர் பங்கேற்பு!!