வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் ஒரு நிலையற்று, ஏற்றத்தாழ்வுடன் வணிகமாகின்றன.
தொடர்ந்து நாளாவது நாளாக அதானி குழும பங்குகள் சரிவை சந்திக்கின்றன. அதானி எண்டர்பிரைசஸின் ரூ.20,000 கோடி ஃபாலோ-ஆன் பொதுச் சலுகை (எஃப்பிஓ) சந்தாவைப் பெற இன்றுதான் இறுதி நாள் என்றபோதும், வணிகத்தின்போது, குறைவானத் தேவையே இருந்துவருகிறது.
அதானி குழுமத்தின் 9 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் பங்குகள் செவ்வாயன்றும் இறங்குமுகத்திலேயே வணிகமாகின்றன. இதிலும் மூன்று நிறுவனங்களின் பங்குகள் இன்று முற்பகல் 12 மணியளவில், இதுவரைக் காணாத விலை சரிவைக் கண்டன.
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் கடந்த மூன்று நாள்கள் வணிகத்தில் 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்திருந்தன.
இந்த நிலையில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை மதிப்புகள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் சரிவுடனே வணிகமாகின்றன.
அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் தொடர் சரிவு ஏற்பட்டு இது தற்போது 5.57 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, அதானி குழும பங்குகளின் மதிப்பு ஜனவரி 24ஆம் தேதி நிறைவின்போது ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்தது. இது நேற்று வர்த்தகத்தின்போது ரூ.13.63 லட்சம் கோடியாக சரிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதானி டோட்டல் கேஸ். அதானி கிரீன் டேங்க், அதானி வில்மர், அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1 முதல் 10 சதவிகித விலை சரிந்து வணிகமாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


