கடந்த மாா்ச் மாதத்தில் இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் மொத்த விற்பனை 68,413-ஆக (4 சதவீதம்) அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனம் 68,413 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 66,041-ஆக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 35,997-லிருந்து 13 சதவீதம் அதிகரித்து 40,631- ஆக உள்ளது. ஏற்றுமதி 2,115-லிருந்து 26 சதவீதம் சரிந்து 1,573-ஆக உள்ளது.
2022-23 நிதியாண்டு முழுமைக்கும் 3,59,253-ஆக இருந்த நிறுவன பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2023-24 நிதியாண்டில் 28 சதவீதம் அதிகரித்து 4,59,877-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மார்ச் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை 20% உயர்வு!

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு

மார்ச் மாதத்தில் மாருதி சுசுகி விற்பனை 16.72% உயர்வு!

இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


