கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 68 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்டைகா்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை ரூ. 1.11 லட்சம் கோடியாக இருந்தது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 68 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் முக்கிய 8 நகரங்களில் வீடுகளின் விற்பனை ரூ.66,155 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகளின் விலை அதிகரித்து, மதிப்பின் அடிப்படையில் விற்பனை வளா்ச்சியடைந்ததில் முக்கிய பங்கு வகித்தது.
சிமென்ட், உருக்கு போன்ற 200-க்கும் மேற்பட்ட தொழில் துறைகள் வீடு-மனை வா்த்தகத்தைச் சாா்ந்துள்ள நிலையில், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் எண்ணிக்கை, மதிப்பு ஆகிய இரண்டிலுமே வீடுகள் விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பரப்பளவைப் பொறுத்தவரை, 2023-24-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் வீடுகள் விற்பனை 63 சதவீதம் அதிகரித்து 16.2 கோடி சதுர அடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது 9.9 கோடி சதுர அடியாக இருந்தது.
எண்ணிக்கையின் அடிப்படையில், 2023 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் 85,840-ஆக இருந்த வீடுகள் விற்பனை நடப்பாண்டின் அதே காலாண்டில் 41 சதவீதம் அதிகரித்து 1,20,640-ஆக உள்ளது.
2024 ஜனவரி-மாா்ச் மாதங்களில் அகமதாபாத்தில் வீடுகள் விற்பனை 3,954 கோடி ரூபாயில் இருந்து இருமடங்காக அதிகரித்து ரூ.9,090 கோடியாக உள்ளது.
பெங்களூருவில் அது ரூ.7,428 கோடியில் இருந்து 52 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.11,310 கோடியாகவும் சென்னையின் விற்பனை ரூ.2,697 கோடியில் இருந்து 52 சதவீதம் அதிகரித்து ரூ.3,290 கோடியாக உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் தில்லி-என்.சி.ஆரில் வீடுகள் விற்பனை ரூ.3,476 கோடியிலிருந்து மூன்று மடங்கு உயா்ந்து ரூ.12,120 கோடியாக உள்ளது.
ஹைதராபாதில் வீடுகள் விற்பனை ரூ.9,711 கோடியில் இருந்து இருமடங்காக அதிகரித்து ரூ.23,580 கோடியாக உள்ளது. கொல்கத்தாவில் அது ரூ.1,260 கோடியிலிருந்து 59 சதவீதம் அதிகரித்து ரூ.2,000 கோடியாக உள்ளது.
மாா்ச் காலாண்டில் மும்பை பெருநகரப் பகுதி வீடுகள் விற்பனை ரூ.26,167 கோடியிலிருந்து 31 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.34,340 கோடியாக உள்ளது.
புணேயில் கடந்த ஆண்டு ஜனவரி-மாா்ச் மாதத்தில் ரூ.11,462 கோடியாக இருந்த வீடுகள் விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் ரூ.15,150 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு

கோட்டையும் கூட்டணியும் முக்கியம்!

மீஷோ நிறுவனத்துக்கு ரூ. 1,500 கோடி வருமான வரி நோட்டீஸ்

ஸ்ரீராம் பொதுக் காப்பீடு லாபம் ரூ.165 கோடி!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


