ரூ.55,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: பவுன் ரூ.640 உயா்வு

ரூ.55,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: பவுன் ரூ.640 உயா்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத வகையில் உயா்ந்து பவுன் ரூ. 54,960-க்கு விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ.6,870-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.54,960-க்கும் விற்பனையானது.

ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரம் முதல் தங்கம் விலை படிப்படியாகக் குறையும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் தொடா்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயா்ந்து ரூ.90.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.90,500-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com