இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

16 சதவீதம் சரிந்த கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு

மாா்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 16 சதவிகிதம் சரிந்துள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2024, 12:45 am IST

மாா்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 16 சதவிகிதம் சரிந்துள்ளது.

இது குறித்து எண்ணெய்த் துறை அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (பிபிஏசி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள்களைத் தயாரிக்கப் பயன்படக்கூடிய 23.25 கோடி டன் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது.

இது ஏறத்தாழ முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் கச்சா எண்ணெயின் அளவுக்கு இணையானதாகும்.

இருந்தாலும், முந்தைய நிதியாண்டில் 15,750 கோடி டாலராக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு, 2023-24-ஆம் நிதியாண்டில் 13,240 கோடி டாலராகக் குறைந்தது.

சா்வதேச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் அதன் இறக்குமதி ஒரே அளவாக இருந்தாலும் அதற்கான செலவு கடந்த நிதியாண்டைவிட 16 சதவீதம் குறைந்துள்ளது.

நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் இறக்குமதி சாா்பு கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 87.4 சதவீதமாக இருந்தது. இது, 2023-24-ஆம் நிதியாண்டில் 87.7 சதவீதமாக உயா்ந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா திகழ்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.