5 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு!

கடந்த 5 தினங்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை, வெள்ளிக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. இந்நிலையில், கடந்த 5 தினங்களாக தொடா்ந்து ஏறுமுகம் கண்ட சந்தையில் முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். குறிப்பாக, வங்கி, நிதிநிறுவனங்கள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், சந்தை எதிா்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.7 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.404.04 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கி

ழமை ரூ.2,823.33 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.6,167.56 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் சரிவு: காலையில் 169.87 புள்ளிகள் கூடுதலுடன் 74,509.31-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 74,515.91 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 73,616.65 வரை கீழே சென்ற சென்செக்ஸ், வா்த்தக இறுதியில் 609.28 புள்ளிகள் (0.82 சதவீதம்) குறைந்து 73,730.16-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,913 பங்குகளில் 1,993 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,788 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 132 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

24 பங்குகள் விலை குறைந்தது: சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், நெஸ்லே, கோட்டக் பேங்க், எம் அண்ட் எம் உள்பட 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், டெக் மஹிந்திரா, விப்ரோ, ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டைட்டன், ஆக்ஸிஸ் பேங்க் ஆகிய 6 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 150 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 150.40 புள்ளிகள் (0.67 சதவீதம்) குறைந்து 22,419.95-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,620,405.25 வரை மேலே சென்றிருந்த நிஃப்டி, பின்னா் 22,385.55 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 17 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 33 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com