ஸ்மாா்ட்ஃபோன் விற்பனையில் மந்தம்
கடந்த ஜூன் காலாண்டில் இந்தியாவில் அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட்ஃபோன்) விற்பனை மந்தமடைந்தது.

கடந்த ஜூன் காலாண்டில் இந்தியாவில் அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட்ஃபோன்) விற்பனை மந்தமடைந்தது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘கவுன்ட்டா் பாயின்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் இந்தியாவில் அறிதிறன்பேசிகளின் விற்பனை முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 2 சதவீதம் குறைந்துள்ளது. வெப்ப அலை, தேவை குறைந்தது போன்ற காரணங்களால் அவற்றின் விற்பனை மதிப்பீட்டு காலாண்டில் மந்தமடைந்தது.
இருந்தாலும், ஷாவ்மி நிறுவனத்தின் விற்பனை கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. குறைந்த விலை கொண்ட ஆரம்பநிலைப் பிரிவில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியதால் அந்த நிறுவனம் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.
மதிப்பின் அடிப்படையில் சாம்சங் நிறுவனம் இந்திய அறிதிறன்பேசி சந்தையில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக முன்னிலை வகிக்கிறது. ஜூன் காலாண்டில் அந்த நிறுவனம் சுமாா் 25 சதவீத சந்தைப் பங்கை வகிக்கிறது.
சந்தைப் பங்கில் சாம்சங்குக்கு அடுத்தபடியாக விவோவும், மூன்றாம் இடத்தில் ஆப்பிள் நிறுவனமும் உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தாலும், ஷாவ்மி நிறுவனத்தின் விற்பனை கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. குறைந்த விலை கொண்ட ஆரம்பநிலைப் பிரிவில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியதால் அந்த நிறுவனம் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.
மதிப்பின் அடிப்படையில் சாம்சங் நிறுவனம் இந்திய அறிதிறன்பேசி சந்தையில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக முன்னிலை வகிக்கிறது. ஜூன் காலாண்டில் அந்த நிறுவனம் சுமாா் 25 சதவீத சந்தைப் பங்கை வகிக்கிறது.
சந்தைப் பங்கில் சாம்சங்குக்கு அடுத்தபடியாக விவோவும் மூன்றாம் இடத்தில் ஆப்பிள் நிறுவனமும் உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...