3 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!
3 நாள்கள் தொடர் சரிவுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வணிகம் முடிந்தது.


3 நாள்கள் தொடர் சரிவுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 874.94 புள்ளிகள் உயர்ந்து 79,468.01 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.11 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 304.95 புள்ளிகள் உயர்ந்து 24,297.50 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.27 சதவிகிதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 24 நிறுவனப் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 6 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிந்திருந்தன.
அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் 3.33%, பவர்கிரிட் 3.32%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 2.54%, டாடா ஸ்டீல் 2.36%, இன்ஃபோசிஸ் 2.32%, மாருதி சுசூகி 1.99%, அல்ட்ராடெக் சிமென்ட் 1.93%, எம்&எம் 1.82% உயர்வுடன் காணப்பட்டன.
இந்தஸ்இந்த் 2.60%, டெக் மஹிந்திரா 0.66%, டைட்டன் கம்பெனி 0.27%, எச்யுஎல் 0.22%, பாரதி ஏர்டெல் 0.13%, ஏசியன் பெயின்ட்ஸ் 0.01% சரிந்தன.
வணிகத்தில் தொடக்கத்தில் சென்செக்ஸ் 79,565.40 புள்ளிகளுடன் தொடங்கியது. அதிகபட்சமாக 400 புள்ளிகள் வரை குறைந்து 79,106.20 என்ற அளவில் சரிந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக 79,639.20 என்ற உச்சத்தையும் சென்செக்ஸ் எட்டியது. வணிக நேர முடிவில் 79,468.01 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
இதேபோன்று நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் இருந்தன. எஞ்சிய 42 நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன.
அதிகபட்சமாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்குகள் 7.52% வரை ஏற்றம் கண்டது. அதற்கு அடுத்தபடியாக முறையே கோல் இந்தியா 6.39%, அதானி எண்டர்பிரைசஸ் 3.69%, அதானி போர்ட்ஸ் 3.33%, பவர் கிரிட் 3.32%, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் 3.12% உயர்வுடன் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...