சென்செக்ஸ் எழுச்சி: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி உயர்வு; 3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி
தொடர்ந்து மூன்று நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை எழுச்சி பெற்று நேர்மறையாக முடிந்தது.


நமது நிருபர்
தொடர்ந்து மூன்று நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை எழுச்சி பெற்று நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 875 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. இதையடுத்து, சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடி உயர்ந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. கடந்த மூன்று தினங்களாக கடும் சரிவைச் சந்தித்திருந்த சந்தையில் ஐடி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ், ஃபார்மா, ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி காணப்பட்டது. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.8.97 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.448.57 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.3,531.24 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,357.45 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 972.33 புள்ளிகள் கூடுதலுடன் 79,565.40}இல் தொடங்கி அதிகபட்சமாக 79,639.20 வரை மேலே சென்றது. பின்னர், 79,106.20 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 874.94 புள்ளிகள் (1.11 சதவீதம்) கூடுதலுடன் 79,468.01}இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 4,031 பங்குகளில் 2,986 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 947 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 98 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
25 பங்குகள் விலை உயர்வு:
சென்செக்ஸ் பட்டியலில் அதானி போர்ட்ஸ், பவர்கிரிட், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், மாருதி உள்பட 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. ஆனால், இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன், டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பார்தி ஏர்டெல் ஆகிய 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 305 புள்ளிகள்
ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,289.40}இல் தொடங்கி அதிகபட்சமாக 24,337.70 வரை மேலே சென்றது. பின்னர் 24,184.90 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 304.95 புள்ளிகள் (1.27 சதவீதம்) கூடுதலுடன் 24,297.50}இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 6 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிம் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...